இலங்கையின் புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று (12) அல்லது நாளை (13) பதவியேற்கவுள்ளார்.
புதிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காண்பது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் நேற்றிரவு கலந்துரையாடப்பட்டதுடன், இன்று (12) காலையும் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள், ஐக்கிய மக்கள் சக்தியின் ஒரு பகுதியினர், தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட பல கட்சிகள் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவை ஏற்கனவே தெரிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
What’s your Reaction?
+1
+1
+1
1
+1
4
+1
1
+1
+1