சுதந்திர இலங்கையின் 26வது பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று (12) பிற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
2019 பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி படுமோசமான தோல்வியை சந்தித்த நேரத்தில், ரணில் விக்கிரமசிங்க அக்கட்சியின் ஒரே தேசியப்பட்டியல் ஆசனத்தின் மூலம் பாராளுமன்றத்திற்கு வந்தார்.
20வது திருத்தச் சட்டத்தின் மூலம் அதிகாரம் பெற்ற ஜனாதிபதியின் கீழ் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அரசாங்கம் இருந்த வேளையில் தனியொரு நாடாளுமன்ற உறுப்பினராக நாடாளுமன்றத்துக்கு வந்த ரணில் விக்கிரமசிங்க பிரதமராகியிருப்பது அதிசயம் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கையின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்பது இது ஆறாவது முறையாகும்.
உலகில் 6 முறை பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே அரசியல்வாதி ரணில் விக்கிரமசிங்க என்பது குறிப்பிடப்படுகிறது.