கொழும்பிலிருந்து வெளியேறும் பேருந்துகள் பல இடங்களில் பொதுமக்களால் சோதனையிடப்பட்ட பின்னரே தொடர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படுகின்றன.
தற்போது அதிவேக நெடுஞ்சாலை மற்றும் வீதிகளில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு வாகனமாக பொதுமக்கள் சோதனை நடப்பதால், நெரிசல் ஏற்பட்டுள்ளது.
கொழும்பில் பொதுஜன பெரமுனவினால் நிகழ்த்தப்பட்ட வன்முறை பேரணிக்கு ஆட்களை ஏற்றிச் சென்ற பேருந்துகள் வருகின்றனவா என பல பகுதிகளில் மக்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
பெரமுன ஆர்ப்பாட்டத்திற்கு ஆட்களை ஏற்றிச் சென்ற பேருந்துகள் அந்த வழிகளில் வந்தால் அடித்து நொருக்கப்படுகின்றன.
What’s your Reaction?
+1
+1
2
+1
+1
+1
+1
+1