இரவு விடுதி கேளிக்கையில் இளம்பெண்ணுடன் ராகுல்காந்தி; வைரலான வீடியோ!

Date:

நேபாளத்துக்கு சென்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஓட்டல் இரவு விடுதியில் நடந்த கேளிக்கை நிகழ்வில் கலந்து கொண்டு ஒரு பெண்ணுடன் பேசிக்கொண்டிருக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. இதனை பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது பத்திரிகையாளர் நண்பரின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக நேபாளத்துக்கு சென்றார். இந்த பயணம் குறித்து வெளிப்படையாக அறிவிக்கவில்லை. அதேசமயம் ஊடகங்களில் மட்டுமே தகவல் வெளியாகி இருந்தது.

திருமணம் முடிந்தத பிறகு நேபாள தலைநகர் காத்மாண்டுவில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் பிரம்மாண்ட விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ராகுல் காந்தி கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற வீடியோவை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் படம்பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளா். வெறும் 12 நொடிகள் மட்டுமே இந்த வீடியோ உள்ளது. அந்த வீடியோவில் ஒரு பெண்ணுடன் ராகுல் பேசிக் கொண்டிருக்கிறார்.

இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சி அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து கடும் நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில் இதுதொடர்பாக அக்கட்சியில் விவாதங்கள் நடந்து வரும் நிலையில் ராகுல் காந்தி நைட் கிளப் ஒன்றில் கேளிக்கை விருந்தில் கலந்து கொண்டிருக்கும் வீடியோ வெளியாகி இருப்பதாக பாஜக தலைவர்கள்வ விமர்சித்து வருகின்றனர்.

இதுகுறித்து பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவுத் தலைவர் அமித் மால்வியா கூறுகையில் ‘‘காங்கிரஸ் மிகவும் பரிதாபத்துக்குரிய நிலையில் இருக்கிறது. ஆனால் அதன் முக்கிய தலைவர் ராகுல் காந்தி வெளிநாட்டு கேளிக்கை விருந்தில் பங்கேற்றிருக்கிறார். காங்கிரஸ் தனது தலைமை பதவியை நேரு குடும்பத்தை தவிர மற்ற யாருக்கும் விட்டுக்கொடுக்கவில்லை. இதுபோன்ற செயலால் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் பதவிக்கு போட்டி ஏற்பட்டுள்ளது’’ என தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

பிரேசில் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்தவர் விரும்பும் வரை அமெரிக்காவில் தங்கலாம்: ட்ரம்ப்

கடந்த வாரம் பிரேசிலின் ஜனாதிபதித் தேர்தலில் இடதுசாரி தற்போதைய ஜனாதிபதி லூயிஸ்...

யாழில் மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 இளைஞர்கள் பலி

யாழ்ப்பாணம், அளவெட்டியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். ஒருவர்...

யாழில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞன்

யாழ்ப்பாணத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இளைஞன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்