24.6 C
Jaffna
January 3, 2025
Pagetamil
இலங்கை

ராஜபக்‌ஷக்கள், சஜித்தின் நிதி மோசடிகளை அம்பலப்படுத்திய அனுர!

நாமல் ராஜபக்ஷ, யோஷித ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பலர் சம்பந்தப்பட்ட ஊழல்களை அம்பலப்படுத்தும் ஆவணங்களை மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) இன்று வெளியிட்டது.

இலங்கை மன்ற கல்லூரியில் இன்று நடைபெற்ற விசேட நிகழ்வில், அரசியல்வாதிகள், முன்னாள் அமைச்சுச் செயலாளர்கள் மற்றும் பொது நிதியை மோசடி செய்த புலனாய்வு அதிகாரிகள் தொடர்பான 500க்கும் மேற்பட்ட கோப்புகள் தங்களிடம் இருப்பதாகத் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் தலைவரும், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் விசாரிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

நிமல் பெரேரா மற்றும் திருகுமார் நடேசன் ஊடாக யோஷித ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோர் பொதுப் பணத்தை மோசடி செய்துள்ளதாக அவர் தனது வெளிப்படுத்தலில் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் ஏர் பஸ் ஒப்பந்தம், ஜின் நில்வாலா திட்டம், க்ரிஷ் டீல், ஹெட்ஜிங் டீல் மற்றும் ஹலோ கார்ப் டீல் உள்ளிட்ட கோப்புகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

சஜித் பிரேமதாச முறையான அனுமதியின்றி மத்திய கலாச்சார நிதியத்தின் 3 பில்லியன் ரூபா நிதியை தேர்தல் செலவிற்கு பயன்படுத்தியதாக குற்றம்சாட்டினார்.

சர்வதேச ரீதியாக பதிவாகும் ஊழல் சம்பவங்கள் இலங்கையையும் இணைக்கின்றன என்றார்.

இலங்கையின் நற்பெயரை மேம்படுத்த 2014 ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவார்ட் கப்ரால் மூலம் 6.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை அமெரிக்க தொழிலதிபர் இமாத் ஜூபேரிக்கு அரசாங்கம் வழங்கியது.

ஜூபேரி தற்போது 12 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

ஆளுநர் கப்ரால் 6.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்தினார், அவரும் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் கூறினார்.

சுபேரிக்கு அனுப்பப்பட்ட நிதி இலங்கையின் நற்பெயரை மேம்படுத்த பயன்படுத்தப்படவில்லை என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இவ்வாறான விசாரணைகள் உள்நாட்டில் ஏன் மேற்கொள்ளப்படுவதில்லை என கேள்வி எழுப்பிய அவர், சர்வதேச ரீதியில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு விசாரணைக்கும் இலங்கையர்களுக்கும் தொடர்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.

இவ்வாறான சம்பவங்கள் அனைத்தும் அரசியல் பாதுகாப்பில் இடம்பெற்றதாக தெரிவித்துள்ளார்.

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது இலங்கை போக்குவரத்துச் சபை, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மற்றும் பல நிறுவனங்களின் பெரும் தொகையான நிதி அப்போதைய வேட்பாளரான மைத்திரிபால சிறிசேன மீது சேற்றை வாரி வீச பயன்படுத்தப்பட்டது.

வர்த்தகர்கள் கூட்டாக பல்வேறு ஊழல் மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.

ஊழலை ஒரு தனி நபர் தன்னிச்சையாக நடத்துவதில்லை என்று குறிப்பிட்ட அவர், ஊழலில் ஈடுபடுபவர்கள் அரசின் ஆசீர்வாதத்துடன் ஊழல் செய்வதாகவும், அரசால் பாதுகாக்கப்படுவதாகவும் கூறினார்.

மக்களின் மேலாதிக்கத்தால் தெரிவுசெய்யப்பட்ட குழு தமது அதிகாரங்களை தனிப்பட்ட நலன்களுக்காக தவறாகப் பயன்படுத்துவதாகக் குற்றம் சுமத்திய திஸாநாயக்க, சீனி, பெறுமதி சேர்ப்பு வரி, சுங்க மோசடிகளுக்குப் பொறுப்பான அரசியல்வாதிகள் மாத்திரம் அன்றி, வர்த்தகர்களும் இந்த ஊழல் கும்பலில் அடங்குவர்.

டீல் வர்த்தகர்கள், சுமார் 50 நிர்வாக அதிகாரிகள், அரச நிறுவனங்களின் செயலாளர்கள் மற்றும் பணிப்பாளர்கள், பொலிசார் உள்ளிட்ட புலனாய்வு அதிகாரிகள், ஊடக நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் இந்த ஆவணங்களில் உள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த ஊழல் மற்றும் மோசடி முறை தோற்கடிக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உயர்தரத்தில் கல்வி பயிலும் போதே மாணவர்கள் பாடசாலையில் இருந்து விலகுவது ஏன்? – ஹரிணி அமரசூரிய

east tamil

இலங்கையில் பிறப்பு வீதம் – வெளியான அதிர்ச்சித் தகவல்

east tamil

யாழில் புதுவருட அட்டகாசம்: வீதியில் சென்றவர்களை காரணமேயில்லாமல் தாக்கிய சம்பவத்தில் 3 பேர் கைது!

Pagetamil

உள்நாட்டு தேங்காய் எண்ணெய்க்கு 18% வரி – அரசின் மீது கடும் விமர்சனம்

east tamil

அரச அச்சுத் திணைக்கள உத்தியோகபூர்வ இணையத்தளம் வழமைக்கு திரும்பியது

east tamil

Leave a Comment