‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படக்குழுவினர் சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவி திரையரங்களில் கேக் வெட்டி படத்தின் வெற்றியை கொண்டாடியதோடு மட்டுமல்லாமல், ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிப்பில் கடந்த 28ஆம் திகதி வெளியான திரைப்படம் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோவுடன் இணைந்து, விக்னேஷ் சிவன், நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
முக்கோண காதல் கதையை கொண்ட இந்த படத்தில், கதிஜாவாக சமந்தாவும், கண்மணியாக நயன்தாராவும் நடித்துள்ளனர். கலவையான விமர்சனங்களை பெற்று வரும் இந்ததிரைப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில், ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படக்குழுவினர் சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவி திரையரங்கத்திற்கு விசிட் அடித்துள்ளனர். இயக்குநர் விக்னேஷ் சிவன், நயன்தாரா, விஜய்சேதுபதி ஆகியோர் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து, படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.