சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைப்பதற்கு பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து தரப்பினரையும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக கட்சி தலைவர்களுக்கு ஜனாதிபதி கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நாளை (28) பிற்பகல் ஜனாதிபதி மாளிகைக்கு அரசாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடவுள்ளதாக தெரியவருகிறது.
இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக நாளை மறுநாள் (29) ஜனாதிபதி மாளிகைக்கு வருகை தருமாறு அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1