Pagetamil
குற்றம்

யாழில் ‘செய்யக்கூடாத செயலில் ஈடுபட்டு’ 6 மாதத்தில் சிக்கிய 8 பெண்கள்!

2 கிலோ கஞ்சாவுடன் பெண் ஒருவர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்புபிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ் அரியாலை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வைத்து கஞ்சா விற்பனையில் குடும்ப பெண் ஒருவர் ஈடுபட்டுவருவதாக மாவட்ட குற்றத்தடுப்புபிரிவினரிற்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து குறித்த பெண் பொலிஸாரினால் கணிகாணிக்கப்பட்டார்.

இதனையடுத்து அவர் கஞ்சா போதைப்பொருளை வீட்டில் மறைத்துவைத்து விற்பனை செய்யும் தருணம் உபபொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான குழுவினர் குறித்த வீட்டை சுற்றிவளைத்தனர்.

இதன்போது விற்பனைக்காக வைத்திருந்த 2 கிலோ கஞ்சா பொதியினை அப் பெண்ணின் உடமையில் இருந்து பொலிஸார் மீட்டதுடன் குறித்த பெண் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட பெண் அரியாலை பகுதியை சேர்ந்த 49 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

யாழில் போதை பொருள் விற்பனையில் பெண்கள் ஈடுபடுவது அதிகரித்த நிலையில் கடந்த 6 மாத காலப்பகுதிகளில் யாழில் 8 பெண்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மாணவியை துஷ்பிரயோகதிற்கு உட்படுத்தியோர் கைது

east tamil

திருடிய பெண்ணை காட்டிக்கொடுத்த கிளி

east tamil

சுடலையில் மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்கள் மீட்பு

east tamil

பேஸ்புக்கில் அறிமுகமாக அழகான யுவதியை சந்திக்க ஹோட்டலுக்கு சென்ற தொழிலதிபர்; அனைத்தையும் உருவிக் கொண்டு எஸ்கேப் ஆன யுவதி!

Pagetamil

கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் ஐஸ்போதைப்பொருளுடன் கைது

east tamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!