முக்கியச் செய்திகள்

டலஸ் அழகப்பெருமவை பிரதமராக்க முயற்சி: தமிழ் தேசிய கூட்டமைப்பும் கொள்கையளவில் ஆதரவு!

பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவை பிரதமராக்கும் நகர்வை ஆதரிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு கொள்கைளவில் தீர்மானித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்ட பொரு  ளாதார நெருக்கடியையடுத்து, மக்கள் போராட்டங்கள் வெடித்துள்ள.நிலையில், அரசியல் ஸ்திரமில்லாத நிலைமையும் ஏற்பபட்டுள்ளது.

ஜனாதிபதி, பிரதமர் பாதவி விலக வேண்டுமென பொதுமக்கள் பேராடி வருகிறார்கள்.  ஆளுந்தரப்பிற்குள்ளும் மோதல் வலுத்து வருகிறது.

இதேவேளை, ஆளுந்தரப்பிலுள்ள முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெருமவை பிரதமராக்கும் நகர்வொன்று இடம்பெறுகிறது.

பெரமுனவிலிருந்து பிரிந்த 11 கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இந்த நகர்வை செயற்படுத்தி வருகிறார்கள்.

ஐக்கிய  மக்கள் சக்தி சைமர்ப்பித்த நம்பிக்கையில்லா பிரேரணையை, அரசிலிருந்து பிரிந்தவர்கள் ஆதரித்து வெற்றிபெற வைப்பதென்றும், பின்னர் அரசிலிருந்து பிரிந்தவர்கள் ஆட்சியமைப்பதென்றும் திட்டமிட்டுள்ளனர்.

இது குறித்து  இரண்டு தரப்புக்களிற்குமிடையில் பல சுற்று கலந்ரையாடல்கள் நடந்துள்ளன.

டலஸ் அழகப்பெருமவை பிரதமர் ஆக்கும் நகர்வை ஆதரிக்கலாமென தமிழ் தேசிய கூட்டமைப்பு கொள்கையளவில் தீர்மானித்துள்ளது

இது குறித்த கலந்துரையாடல்கள் கூட்டமைப்பிற்குள் இடம்பப்று வருகின்றன.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Related posts

அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி ஏற்றுமதியை தற்காலிகமாக நிறுத்தியது இந்தியா!

Pagetamil

ஈபிள் கோபுரத்திலிருந்து கயிற்றில் நடந்த சாகசக் கலைஞர்! (VIDEO)

Pagetamil

மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை, நுவரெலியா உள்ளிட்ட 10 மாவட்டங்களில் பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!