Pagetamil
குற்றம்

யாழில் கொன்று புதைக்கப்பட்ட பெண்: திடுக்கிடும் தகவல்கள்!

ஏப்ரல் 7ஆம் திகதி மாலை.

யாழ்ப்பாண பொலிசாருக்கு கிடைத்த புலனாய்வு தகவலொன்றின் அடிப்படையில், அரியாலை, மணியந்தோட்டத்திலுள்ள வீடொன்றின் பின் வளவில் நடத்திய சோதனையில், மோட்டார் சைக்கிள் ஒன்று புதைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

அந்த மோட்டார் சைக்கிள், காணாமல் போன பெண்ணொருவருடையது.

அந்தப் பெண் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக காணாமல் போயிருந்தார். அவரது மோட்டார் சைக்கிள் புதைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டதால், அந்த பெண்ணின் சடலமும் அந்த வளவில் புதைக்கப்பட்டிருக்கலாமென பொலிசார் நம்பினார்கள்.

மறுநாள். ஏப்ரல் 8ஆம் திகதி. மணியந்தோட்டத்தின், உதயபுரம் பகுதியிலுள்ள அந்த வீட்டு வளாகத்தில், காணாமல் போன பெண்ணின் சடலமும், மோட்டார் சைக்கிளும் புதைக்கப்பட்டிருக்கலாமென்ற பொலிசாரின் தகவலின் அடிப்படையில், அங்கு நிலத்தை அகழ்ந்து சோதனையிட நீதிமன்றம் அனுமதியளித்தது.

8ஆம் திகதி மாலை. அந்த வீட்டின் பின்புறம் நிலத்தை அகழ்ந்து சோதனையிட்டதில் பெண்ணின் சடலமும், மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டன.

கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டவர் அதே இடத்தை சேர்ந்த பிரதீபன் ஜெசிந்தா என்ற 42 வயதுடைய பெண்.

ஜெசிந்தா ஏன் கொல்லப்பட்டார்? அவருக்கு என்ன நடந்தது என்பது தெரியாமல் ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்த மர்மம் எப்படி துலங்கியது?

சம்பவங்களை முழுமையாக அறிய வீடியோவை பாருங்கள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
1
+1
5

இதையும் படியுங்கள்

பத்தேகம குழு மோதல் – இரு கோதரர்கள் கொலை

Pagetamil

மாணவியை துஷ்பிரயோகதிற்கு உட்படுத்தியோர் கைது

Pagetamil

திருடிய பெண்ணை காட்டிக்கொடுத்த கிளி

Pagetamil

சுடலையில் மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்கள் மீட்பு

Pagetamil

பேஸ்புக்கில் அறிமுகமாக அழகான யுவதியை சந்திக்க ஹோட்டலுக்கு சென்ற தொழிலதிபர்; அனைத்தையும் உருவிக் கொண்டு எஸ்கேப் ஆன யுவதி!

Pagetamil

Leave a Comment