ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது சொத்துக்கள் அனைத்தையும் கணக்காய்வு செய்து அதன் அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினராக 12 வருடங்கள் பதவி வகித்த காலத்தில் சொத்து அறிக்கைகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
2015ஆம் ஆண்டுக்கு முன்னரும் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. உலகில் எந்தவொரு நாட்டிலும் முறைகேடாகச் சம்பாதித்த சொத்துக்கள் இருந்தால் அவர் அல்லது அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மீது வழக்குத் தொடர வேண்டும் என்றார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1