26.9 C
Jaffna
February 28, 2025
Pagetamil
இலங்கை

பெண்கள், பெரமுனவின் முக்கிய பிரமுகர்கள் பலர் அவுட்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆதரவாளர்களான மூத்த பிரமுகர்கள் பலருக்கு இன்று நியமிக்கப்பட்ட புதிய அமைச்சரவையில் இடம் வழங்கப்படவில்லை. அத்துடன், அமைச்சரவையில் பெண்களும் இணைக்கப்படவில்லை.

04 பேர் கொண்ட தற்காலிக அமைச்சரவையில் அங்கம் வகித்த நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபயவின் முக்கிய ஆதரவாளர்களான மஹிந்தானந்த அலுத்கமகே மற்றும் ரோஹித அபேகுணவர்தன ஆகியோருக்கும் பதவிகள் வழங்கப்படவில்லை.

முன்னாள் அமைச்சர்களான கெஹலிய ரம்புக்வெல்ல, சரத் வீரசேகர, காமினி லொக்குகே, டலஸ் அழகப்பெரும, பவித்ரா வன்னியாராச்சி மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகிய முக்கிய பிரமுகர்களும் புதிய அமைச்சரவையில் இடம்பெறவில்லை.

நாமல் ராஜபக்ஷ, சமல் ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ மற்றும் ஷசீந்திர ராஜபக்ஷ போன்ற ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களும் புதிய அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அடுத்த 24 மணி நேரத்துக்கு தொடரும் சீரற்ற வானிலை

east tamil

விசாரணை அறிக்கைகள் மாயம் – நளிந்த ஜயதிஸ்ஸ

east tamil

கிராமிய திட்டங்களுக்கு 1400 பில்லியன் மூலதன ஒதுக்கீடு – ஜனாதிபதி

east tamil

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கப்பட வேண்டும் – ஜோன் ஜிப்ரிகோ

east tamil

பிறைக்குழு மாநாடு இன்று!

east tamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!