பாவம் பார்த்து வேலையில் வைத்திருந்த பொலிஸ்காரரே போராட்டத்திற்கு போனாராம்!

Date:

அரசாங்கத்தை பதவிவிலக வலியுறுத்தி காலி முகத்திடலில் இடம்பெறும் மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் ஈடுபட்ட பொலிஸ் சார்ஜன்ட்க்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அவர் பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

போராட்டத்தில் கலந்து கொண்டவர் குட்டிகல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் ஏ.அமரதாச (30158) என்ற பொலிஸ் சார்ஜன்ட் என அடையாளம் கண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

பல்வேறு பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் போது பல்வேறு முறைகேடுகள் காரணமாக பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்த இந்த பொலிஸ் சார்ஜன்ட் கருணைக் காரணங்களினால் மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

சிறிபாகம பொலிஸ் நிலையத்தில் விஷேட கடமையில் ஈடுபட்டிருந்த போது, பொறுப்பதிகாரிக்கு அறிவிக்காமல் காலி முகத்திடலுக்கு வந்ததாக அவர் கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

அராலிச்சந்தி வாள்வெட்டு: நால்வர் கைது!

ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் மீது அராலிச்...

அக்கரைப்பற்றில் வர்த்தக நிலையத்தில் திடீர் தீ விபத்து

அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள பிரபல வர்த்தக நிறுவனம்...

பாலமுனை விபத்தில் ஒருவர் பலி

அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியில் பாலமுனைப் பகுதியில் நேற்று (12)...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்