ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் பதவி விலகக் கோரி கொழும்பு காலி முகத்திடலில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் 7வது நாளாக இன்று (15) போராட்டம் தொடர்கிறது.
நேற்று இரவு பெருந்திரளான மக்கள் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிங்கள, தமிழ் புத்தாண்டு தினமான நேற்று, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் காலி முகத்திடலுக்கு பெருமளவான மக்கள் வந்து ஆதரவு தெரிவித்திருந்தனர்.





