பேராசிரியர் பாலகுமாருக்கு மருத்துவ பீடத்தில் இறுதி மரியாதை

Date:

யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் முன்னாள் பீடாதிபதியும், உயிர் இரசாயனவியல் துறையின் தற்போதைய தலைவருமாகிய மறைந்த பேராசிரியர்.ச.பாலகுமாருக்கு இறுதி மரியாதை செலுத்தும் வகையில் எதிர்வரும் 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, முற்பகல் 11 மணியளவில் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தினால் இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நிகழ்வு குறித்து யாழ். பல்கலைக்கழக சமூகத்தினரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் வருமாறு:

“12.04.2022 செவ்வாய்க்கிழமை அன்று அமரத்துவம் அடைந்த பேராசிரியர்.ச.பாலகுமார் அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் 17.04.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணிக்கு மருத்துவபீட ஹூவர் கலையரங்கில் நடைபெறவுள்ளது.

பேராசிரியரின் நேயத்துக்குரிய நண்பர்கள், மாணவர்கள், பல்கலைக்கழக சமூகத்தினர், கல்விச் சமூகத்தினர், சமூக ஆர்வலர்கள் அனைவரையும் காலக்கனதி மிக்க இவ் அஞ்சலி நிகழ்வில் கலந்து அமரர் பேராசிரியர் ச.பாலகுமாருக்கு இறுதிவணக்கம் செலுத்த உரிமையுடன் அழைக்கின்றோம்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

னோஜனின் குடும்பத்திற்கு ரிஷாட் பதியுதீன் நேரில் ஆறுதல்: விடுதலைக்காகத் தீவிர முயற்சி

சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கல்முனை, நற்பிட்டிமுனையைச்...

சஹ்ரானைக் கண்டதுமில்லை-பேசியதுமில்லை-ரிசாட் பதியுதீன்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிமுடன் தனக்கு...

யாழில். இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் , சேந்தான்குளம் பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் சேத்தான்குளம் பகுதியில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்