ரஷ்யாவின் முக்கிய போர்க்கப்பல் உக்ரைன் தாக்குதலில் மூழ்கியது!

Date:

கருங்கடலில் நிலைகொண்டிருந்த ரஷ்யாவின் ஏவுகணை போர்க்கப்பலான மாஸ்க்வா (Moskva), உக்ரைனின் தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனியர்கள் இரண்டு நெப்டியூன் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் கப்பல் கடுமையான சேதமடைந்ததாக ஒடெசாவின் பிராந்திய நிர்வாகத்தின் தலைவர் டெலிகிராமில் தெரிவித்தார்.

ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் கப்பல் “தீயினால் வெடிமருந்துகள் வெடித்ததன் விளைவாக தீவிரமாக சேதமடைந்தது” என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. 

பணியாளர்கள் முற்றிலும் வெளியேற்றப்பட்டனர், தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டு வருவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது என அதன் அரசு நிறுவனமான TASS தெரிவித்துள்ளது.

மாஸ்க்வா போர்க்கப்பல் ரஷ்யாவின் கருங்கடல் கடற்பிரிவின் முதன்மையான போர்க்கப்பலாகும்.  உக்ரைன் மீதான கடற்படை தாக்குதலுக்கு தலைமை தாங்குவதாக கூறப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

கொழும்பு தேசிய வைத்தியசாலை இயல்புக்கு திரும்பியது!

கொழும்பு தேசிய மருத்துவமனையில், பலத்த மழையினால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கின் காரணமாகச்...

முன்னாள் காதலி இப்போது என்ன செய்கிறாள்? – தகவல் அறியும் சட்டத்தில் 1,886 கேள்விகள் கேட்ட இளைஞர்

விழுப்புரம் மாவட்​டத்​தைச் சேர்ந்த சந்​தோஷ் (22) என்​பவர், கடந்த 2021-2024 ஆண்​டுகளில்...

பட்டினியால் இறந்து சொர்க்கம் செல்லலாமென கூறி 190 பேரை கொன்ற மதகுருவுக்கு 200 வருட சிறை

கென்யாவின் ஷாகஹோலா வனப்பகுதியில் பட்டினி கிடந்து உயிரிழக்கத் தூண்டிய மதக் குழுவின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்