முரண்பட்டவரின் வீட்டுக்கு கூலிப்படையை ஏவியது கனடா தமிழரா?

Date:

சுன்னாகம் பகுதியிலுள்ள வீடொன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு , வீட்டின் உரிமையாளருக்கும் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. கனடாவிலுள்ள ஒருவரே கூலிப்படையை ஏவி தாக்குதல் நடத்தியிருக்கலாமென வீட்டு உரிமையாளர் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

சுன்னாகம் , புனித அந்தோனியார் வீதியில் உள்ள வீடொன்றின் மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த வீட்டினுள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் வீட்டின் பிரதான வாயில் கதவை அடித்து உடைத்து நுழைந்து, ஜன்னல் கண்ணாடிகள் என்பவற்றை அடித்து நொறுக்கியத்துடன்,  வீட்டின் உரிமையாளருக்கும் கொலை அச்சுறுத்தல் விடுத்து பின்னர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வீட்டின் உரிமையாளரால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கனடாவில் உள்ள நபர் ஒருவர் தன்னுடன் முரண்பட்டு அச்சுறுத்தல் விடுத்து வந்த நிலையில் , அவரது தூண்டுதலில் யாழில் உள்ள வன்முறை கும்பல் ஒன்றுக்கு பணம் வழங்கப்பட்டே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என வீட்டு உரிமையாளர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் சுண்னாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

குற்றத்தை ஏற்றுக்கொண்ட ஜோன்ஸ்டன்

பதிவு செய்யப்படாத மற்றும் போலியான இலக்கத் தகடுகளைக் கொண்ட பிஎம்டபிள்யூ (BMW)...

வெளிநாடு செல்ல அனுமதி கோரும் கோட்டா

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ...

தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் முன்னாள் தலைவருக்கு பிணை

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட தேசிய இளைஞர் சேவை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்