மட்டக்களப்பு பெண் ஓமானில் மரணம்!

Date:

மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனை பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய தாயொருவர் ஓமான் நாட்டில் மரணமடைந்துள்ளார்.

ஒரு பெண் பிள்ளையின் தாயான இவர், நான்கு மாதங்களுக்கு முன்னர் தொழில் நிமித்தம் காரணமாக ஓமான் நாட்டிற்கு சென்றுள்ளார்.

இவ்வாறு அங்கு சென்ற அந்த பெண்ணுக்கு திடீரென ஏற்பட்ட நோய் காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணித்துள்ளதாக ஓமான் நாட்டிலிருந்து தமக்கு தகவல் கிடைத்ததாக மரணமடைந்த பெண்ணின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

குறித்த பெண்மணி மூன்று நாட்களுக்கு முன்னர் மரணித்த நிலையில், குடும்பத்தாருக்கு நேற்று (13) தகவல் கிடைத்ததாக குடும்பத்தார் மேலும் தெரிவித்தனர்.

அங்கு மரணமடைந்த பெண்ணின் உடலை அந்நாட்டிலே நல்லடக்கம் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

கல்முனை சாஹிரா மாணவன் மாகாண மட்ட நீளம் பாய்தலில் வெண்கலம். தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவு

மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வரும் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான...

தொற்றுநோய் தரவு முகாமைத்துவத்தை மேம்படுத்தும் நோக்கில் கல்முனையில் ‘EPINet’ பயிற்சி செயலமர்வு

தொற்று நோய் தொடர்பான தரவுகளை முகாமைத்துவம் செய்வதிலும், பொதுச் சுகாதார சேவைகளின்...

நாடு சார்ந்த மனித உரிமை ஆணைகள் காலவரையின்றி தொடரக் கூடாது – ஐ.நா.வில் இலங்கை வலியுறுத்தல்

நாடு சார்ந்த மனித உரிமை ஆணைகள் காலவரையின்றி தொடர அனுமதிக்கக் கூடாது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்