ஈஸ்டர் தாக்குதல் சந்தேகநபர்களிடமிருந்து ரூ.365 மில்லியன் சொத்துக்கள் பறிமுதல்!

Date:

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களிடமிருந்து 365 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்களிடம் இருந்து 165 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கம் மற்றும் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இன்று ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 68 நபர்கள் வர்த்தமானி அறிவித்தல் மூலம் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஈஸ்டர் தாக்குதல்கள் அதன் மூன்றாண்டு நினைவு நாளை நெருங்கிவிட்டதாக மூத்த டிஐஜி கூறினார். இந்த தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை சிறிலங்கா பொலிஸ், குற்றப் புலனாய்வு திணைக்களம், பிராந்திய பொலிஸ் நிலையங்கள் மற்றும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.

தாக்குதல்களின் பின்னர், எப்.பி.ஐ, மற்றும் அவுஸ்திரேலியா ஃபெடரல் பொலிஸ் போன்ற சர்வதேச அமைப்புகளின் ஆதரவையும் இலங்கை பெற்றுள்ளதாகவும், அதேவேளை, குண்டுவெடிப்புகளை விசாரிக்கவும் குற்றவாளிகளை அடையாளம் காணவும் இலங்கைக்கு அவர்களின் நிபுணர்களும் வருகை தந்துள்ளதாக மூத்த பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இவ்வாறான விசாரணைகளின் விளைவாக 2020 நவம்பர் 12 ஆம் திகதி லொஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றம் மூன்று சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைத்ததுடன், தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களில் ஐந்து அமெரிக்கர்களும் இருந்ததால் அவர்களுக்கு எதிராக 71 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ததாக அவர் குறிப்பிட்டார்.

சந்தேகநபர்களான மொஹமட் நௌபர் அல்லது நௌபர் மௌலவி, ரிஸ்கான் மற்றும் மில்ஹான் ஆகிய மூவரும் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரோஹண தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

மரத்தில் கட்டிவைக்கப்பட்ட இளைஞன் பொலிஸ் காவலில் உயிரிழந்த சர்ச்சை சம்பவம்!

கொபெய்கனே  பொலிஸாரின் காவலில் இருந்த சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக,...

மேய்ச்சல் தரை விவகாரம்: மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் முன் போராட்டம்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் பாரம்பரியமான மயிலத்தமடு மற்றும் மாதவனை மேய்ச்சல் தரைகளை சட்டவிரோத...

ஐ.ம.ச, ஐ.தே.க கூட்டும் வெற்றி பெறுவது சிரமம்!

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி இடையிலான கூட்டணி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்