பிரபல தமிழ் நடிகை கர்ப்பம்!

Date:

அருள்நிதியுடன் ‘உதயன்’, கார்த்தியுடன் ‘சகுனி’, சூர்யாவுடன் ‘மாசு என்கிற மாசிலாமணி’ போன்ற படங்களில் நடித்தவர் பிரணிதா. தமிழில் கடைசியாக அதர்வாவுடன் இணைந்து ‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’ படத்தில் நடித்திருந்தார்.

கன்னடம், தெலுங்கு மொழிகளிலும் ஏராளமான படங்களில் பிரணிதா நடித்திருந்தார். இவருக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. சில நாட்களுக்கு முன் பிரணிதா தனது ஓராண்டு திருமண நாளைக் கொண்டாடினார்.

இந்த நிலையில் ”இதுவரை சந்திக்காத நபருடன் காதல் கொண்டுள்ளீர்களா ? நான் காதல் கொண்டுள்ளேன்” என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரணிதா பதிவிட்டிருந்தார். இதனையடுத்து அவர் கர்ப்பமாக இருப்பதை மறைமுகமாக இப்படி தெரிவிக்கிறார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.

இதன் ஒரு பகுதியாக மருத்துவ தகவல்களுடன் கூடிய புகைப்படங்களைப் பகிரந்து தான் கர்ப்பமாக இருப்பதை பிரணிதா உறுதிப்படுத்தியுள்ளார். அவரது பதிவில், ”என் கணவரின் 34வது பிறந்த நாளில் எங்களுக்கு கிடைத்த பரிசு” என்று குறிப்பிட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

வெப்பமான வானிலை குறித்து ‘அம்பர்’ எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தம் தொடர்பான முன்னெச்சரிக்கை பிரிவினால் வெப்பமான வானிலை...

35 வருட வெள்ளைப் பணிக்கு ஓய்வு!

அன்பும், அர்ப்பணிப்பும் நிறைந்த ஒரு நீண்டகால வைத்தியசாலைப் பணியை வெற்றிகரமாக நிறைவு...

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் புதிய அதிபராக அருட்தந்தை லெபோன் சுதன் கடமையேற்பு

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையின் புதிய அதிபராக இலங்கை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்