இலங்கை நிலைமை குறித்து நியூசிலாந்து பிரதமரின் கருத்து!

Date:

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் தொடர்வதால், இலங்கை நம்பமுடியாத கொந்தளிப்பான காலகட்டத்தை அனுபவித்து வருவதாக நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டர்ன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ஆர்டெர்ன், “நியூசிலாந்திற்கான வெளியுறவுக் கொள்கை தாக்கங்களின் அடிப்படையில், அமைச்சகத்திடம் இருந்து வரும் 24 மணிநேரத்தில் கூடுதல் விளக்கத்தைப் பெற உள்ளேன்” என்றார்.

இதற்கிடையில், இலங்கைத் தலைமையின் செயற்பாடுகளை நியூசிலாந்து அரசாங்கம் கண்டிக்க வேண்டும் என நியூசிலாந்து இலங்கையர்கள் கோரிக்கை மனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.

இலங்கையின் தலைமையை அவர் கண்டிக்கிறாரா என்று கேட்கப்பட்டபோது, ​​ஆர்டெர்ன் நேரடியாக பதிலளிக்கவில்லை. ஆனால் இலங்கை மக்களின் வளர்ந்து வரும் விரக்தியை ஒப்புக்கொண்டார்.

“இலங்கையில் அரசியல் மற்றும் உள்நாட்டில் இது மிகவும் கொந்தளிப்பான காலம்” என்று அவர் கூறினார்.

நியூசிலாந்து வெளியுறவு அமைச்சர் நனையா மஹுதா குறிப்பிடுகையில், “நியூசிலாந்து பேச்சு சுதந்திரம் மற்றும் அமைதியான முறையில் எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமை உட்பட. ஜனநாயக விழுமியங்களையும் நிறுவனங்களையும் வலுவாக நிலைநிறுத்துகிறது” என்றார்.

இலங்கையில் வெளிவரும் பொருளாதார, அரசியல் மற்றும் பாதுகாப்பு நிலைமையை நியூசிலாந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், அமைதியான தீர்வுக்காக தொடர்ந்து பணியாற்றுவதற்கு அனைத்துத் தரப்பினரையும் ஊக்குவிப்பதாகவும் அவர் கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை நிறைவு

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறன்று நாட்டின் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும்...

வெப்பமான வானிலை குறித்து ‘அம்பர்’ எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தம் தொடர்பான முன்னெச்சரிக்கை பிரிவினால் வெப்பமான வானிலை...

35 வருட வெள்ளைப் பணிக்கு ஓய்வு!

அன்பும், அர்ப்பணிப்பும் நிறைந்த ஒரு நீண்டகால வைத்தியசாலைப் பணியை வெற்றிகரமாக நிறைவு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்