இனிமேல் ‘பல்டி’ இல்லை: கோட்டா தரப்பை ஆதரித்த மு.கா எம்.பி அறிவிப்பு!

Date:

இனிமேல் கட்சி கட்டுப்பாட்டை மீறி பல்டியடிக்க மாட்டேன் என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்பட்ட பிரேரணைகளில் கீழ் 20வது அரசியலமைப்புத் திருத்தம், பசில் ராஜபக்‌ஷவினால் கொண்டுவரப்பட்ட நிதி சம்மந்தப்பட்ட ஒரு பிரேரணை, 2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பின் வாக்கெடுப்பு போன்றவைகளுக்கு மாத்திரம் தான் நான் ஆதரவை வழங்கியிருந்தேன்.

ஆனால் இனிவரும் காலங்களில் அரசாங்கத்தினால் கொண்டுவரப்படுகின்ற எந்த பிரேரணைக்கும் ஆதரவாக வாக்களிப்பதில்லை என்று தீர்மானித்துள்ளேன்.

எனது கட்சியின் தீர்மானத்திற்கு கட்டுப்பட்டதுடன் நாட்டில் ஏற்பட்டிருக்கும் விலையேற்றம், எரிபொருள் இல்லாமை, எரிவாயு இல்லாமை, மருந்துகள் தட்டுப்பாடு, அத்தியாவசிப் பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் பல காரணங்களுக்காக இத்தீர்மானத்தினை எடுத்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் புதிய அதிபராக அருட்தந்தை லெபோன் சுதன் கடமையேற்பு

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையின் புதிய அதிபராக இலங்கை...

பஸ் லலித் விசாரணையில் கக்கியவை!

டுபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குற்றவாளி லலித் கண்ணங்காரவிடம் நடத்தப்பட்ட...

அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு விளக்கமறியல்

கைதான மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை நாளை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்