ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவசரகால நிலையை பிரகடனப்படுத்தி வெளியிடப்பட்ட பிரகடனத்தை இரத்து செய்யும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதியினால் பிறப்பிக்கப்பட்ட அவசரகால சட்டம் பாராளுமன்ற வாக்கெடுப்பில் தோல்வியுறும் நிலைமை காணப்பட்டது. நாட்டு நிலைமை குறித்து இன்றும், நாளையும் பாராளுமன்றத்தில் விவாதம் இடம்பெறும் சூழலில், அவசரகால நிலைமை மீதான வாக்கெடுப்பை எதிரணிகள் கோரவிருந்தன.
இதுதவிர, அரசிலிருந்து வெளியேறிய பங்காளிகளும் அவசரகால சட்டம் பிறப்பிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ளவில்லையென அறிவித்திருந்தன. நாடாளுமன்ற பெரும்பான்மையை உறுதிசெய்வதெனில், சிறிலங்கா சுதந்திரக்கட்சியையேனும் சமரசம் செய்ய வேண்டிய நிலைமை அரசிற்கு இருந்தது.
இந்த நிலையில் ஏப்ரல் நள்ளிரவு முதல் அவசரகால நிலைமை மீளப்பெறப்பட்டுள்ளது.