மொட்டுக் கூடாரம் உடைகிறது: நாடாளுமன்றத்தில் தனித்து செயற்படவுள்ளவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது!

Date:

அமைச்சர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் சுயேச்சைக் குழுவாக நாளை (05) முதல் பாராளுமன்றத்தில் தனியாக அமர்வார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவும் அரசாங்கத்தில் இருந்து விலகி தனியே அமரவுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட போதிலும் அவர்கள் இன்னும் ஆளும் கட்சியிலேயே உள்ளனர்.

விமல் வீரவன்சவும், உதய கம்மன்பிலவும் நாளை பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்து சுயேச்சையாக செயற்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்றும் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சுப் பதவிகளைப் பெறாத பல சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் குழுவில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகத் தெரியவருகிறது.

spot_imgspot_img

More like this
Related

மரத்தில் கட்டிவைக்கப்பட்ட இளைஞன் பொலிஸ் காவலில் உயிரிழந்த சர்ச்சை சம்பவம்!

கொபெய்கனே  பொலிஸாரின் காவலில் இருந்த சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக,...

மேய்ச்சல் தரை விவகாரம்: மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் முன் போராட்டம்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் பாரம்பரியமான மயிலத்தமடு மற்றும் மாதவனை மேய்ச்சல் தரைகளை சட்டவிரோத...

ஐ.ம.ச, ஐ.தே.க கூட்டும் வெற்றி பெறுவது சிரமம்!

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி இடையிலான கூட்டணி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்