அரசிலிருந்து வெளியேறுகிறது சு.க: இன்று அறிவிப்பு?

Date:

அரசாங்கத்தில் இருந்து விலக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று (04) மாலை 5.00 மணிக்கு மஹகமசேகர மாவத்தையில் உள்ள கட்சி தலைவர் மைத்திரியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் கூடவுள்ளது.

அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்றக் குழு நேற்று (03) இரவு முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் கூடியபோதும், பதினான்கு உறுப்பினர்களில் மூவர் இல்லாத காரணத்தினால், நாளை பிற்பகல் நடைபெறும் குழு கூட்டத்தில் இறுதி முடிவெடுப்பது என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அணியினர் இன்று அல்லது நாளை  அரசாங்கத்தில் இருந்து வெளியேறும் முடிவை அறிவிப்பதுடன், எதிர்க்கட்சியாக பாராளுமன்றத்தில் தனியாக அமர உள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

2027 ஏப்ரல் வரை TIN சான்றிதழ் கட்டாயமில்லை

உள்நாட்டு இறைவரித் திணைக்களம், குறிப்பிட்ட எட்டு வகையான பரிவர்த்தனைகளுக்கு வரி செலுத்துவோர்...

பாதியிலேயே முடிந்த மருத்துவர் கனவு

ஜித்தோட்ட ரயில் நிலையத்திற்கு அருகில், தண்டவாளத்திற்கு அருகிலும், கங்காதிலக விகாரைக்குச் செல்லும்...

சர்வதேச கால்பந்தாட்டத்திலிருந்து ஓய்வுபெற்றார் கிறிஸ்டியானோ ரொனால்ட்டோ!

போர்த்துக்கல் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது 41-வது வயதில் சர்வதேச...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்