மீண்டும் இணைய அழைப்பு விடுத்த கோட்டா!

Date:

பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில மற்றும் திரான் அலஸ் ஆகியோரை மீண்டும் அரசாங்கத்தில் இணைந்து கொள்ளுமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

மேற்படி உறுப்பினர்களுடன் சனிக்கிழமை பேச்சு நடத்திய போது, இந்த அழைப்பை விடுத்தார்.

அரசாங்கத்தில் அமைச்சரவைப் பதவிகளை வகித்த வீரவன்ச மற்றும் கம்மன்பில ஆகியோரின் அமைச்சுப் பதவிகளை ஜனாதிபதி பறித்திருந்தார்.

தற்போதைய நிலைமையை விமர்சிக்கும் கருத்தரங்கு நடத்தியதை தொடர்ந்து அவர்களின் அமைச்சு பதவிகள் பறிக்கப்பட்டன. இதை தொடர்ந்து, அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவும் தனது அமைச்சுப் பொறுப்பிலிருந்து விலகி இருக்க  தீர்மானித்தார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் சனிக்கிழமை மேற்படி நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதி கோட்டாபயவின்  வீட்டிற்கு சென்று சந்தித்திருந்தனர்.

இதன்போது, அவர்களை மீள அரசில் இணையுமாறு ஜனாதிபதி கேட்டள்ளார்.

எனினும், அனைத்துக் கட்சிகளுடனும் கலந்தாலோசித்து இடைக்கால நிர்வாகம் அமைக்கப்படாவிட்டால் அரசில் இணைய முடியாதென அவர்கள் தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

செம்மணி புதைகுழி விவகாரம்: ராஜ் சோமதேவவின் விளக்கங்கள் குறித்து சுயாதீன ஆய்வு கோரும் அமெரிக்கத் தமிழர் அமைப்பு!

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழிகள் தொடர்பாகப் பேராசிரியர் ராஜ் சோமதேவ முன்வைத்துள்ள...

மட்டக்களப்பில் பிள்ளையான் உட்பட 3 பேருக்கு தொடர்ந்து நவம்பர் 10 திகதி வரை விளக்கமறியல்

மட்டக்களப்பில் கடந்த 2008 ம் ஆண்டு ரி 56 ரக துப்பாக்கியால்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்