நவீன தொழில்நுட்ப அறிவற்ற ஒரு குழுவே சமூக ஊடக தடை முடிவையெடுத்தது!

Date:

“நீங்கள் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராக இருந்தால், அரசாங்கத்தை தூக்கி எறியுங்கள், ஆனால் நாட்டைக் கவிழ்க்காதீர்கள்” என அரச மற்றும் தனியார் ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் முன்னிலையில் முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை ஊடகத்துறையினரை சந்தித்த போது இதனை தெரிவித்தார்.

74 வருடங்களாக பாதுகாக்கப்பட்ட ஜனநாயகத்தை பாதுகாப்பது அனைவரினதும் பொறுப்பு எனவும், மிரிஹான ஜனாதிபதி இல்லத்திற்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இடம்பெற்ற வன்முறைகளை மன்னிக்க முடியாது எனவும் அழஹப்பெரும தெரிவித்துள்ளார்.

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தானும் ஏற்றுக்கொள்வதாகவும், மக்களின் எதிர்ப்பில் நியாயம் இருப்பதாகவும் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வட்ஸ்அப், வைபர், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை தடை செய்வது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் அழகப்பெரும, இது அரசியல் ரீதியில் தேவையற்ற தீர்மானம் என தெரிவித்துள்ளார்.

வட்ஸ்அப், வைபர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களை தடை செய்யும் முடிவுக்கு தானும் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறிய அவர், இது நவீன தொழில்நுட்பம் தெரியாத ஒரு குழுவால் எடுக்கப்பட்ட முடிவு என்றும் கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

முச்சக்கர வண்டி கவிழ்ந்து 4 பாடசாலை மாணவர்கள் காயம்!

ஹட்டன் - புளியாவத்தை பிரதான சாலையில், பி.டபிள்யூ. (P.W.) பகுதியில், மாணவர்கள்...

பெண் கொலை: தூக்கில் ஆணின் சடலம்!

புசல்லாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொரகல, பகுதியில் பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டி...

துடுப்பாட்ட தரவரிசையில் 16வது இடத்திற்கு முன்னேறிய பவன் ரத்நாயக்க

இலங்கைத் துடுப்பாட்ட வீரர் பவன் ரத்நாயக்க, சமீபத்திய ஐசிசி ஆடவர் ஒருநாள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்