சர்வகட்சி அரசு அழைப்பை எதிர்க்கட்சிகள் கூட்டாக நிராகரிப்பு!

Date:

சர்வகட்சி இடைக்கால அரசாங்கம் அமைப்பதற்கான ஜனாதிபதியின் கோரிக்கையை எதிர்க்கட்சிகள் கூட்டாக நிராகரித்துள்ளன.

தற்போதைய அரசின் தோல்வியடைந்த பொருளாதார முகாமைத்துவத்தினாலேயே நாடு பொருளாதார நெருக்கடியை சந்தித்தது என்றும், இதற்கு தார்மீக பொறுப்பேற்று அரசு பதவிவிலக வேண்டுமென்றும் வலிறுத்தி நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது.

மக்களின் கொந்தளிப்பு உச்சமடைந்ததையடுத்து, நேற்று இரவு பிரதமர் தவிர்ந்த அமைச்சரவை பதவிவிலகியதாக அறிவிக்கப்பட்டது.

இன்று 4 அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்தனர். முன்னாள் நீதியமைச்சர் தற்போதைய நிதியமைச்சராக பதவியேற்றார். இதைதவிர வேறெந்த மாற்றமும் நிகழவில்லை.

இதை தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளும் அமைச்சு பொறுப்பேற்று, அரசுடன் ஒன்றிணைந்து தற்போதைய நெருக்கடியை வெற்றிகொள்ள வேண்டுமென ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.

இதனை பிரதான எதிர்க்கட்சிகள் அனைத்தும் நிராகரித்து விட்டன.

ஐக்கிய மக்கள் சக்தி

தற்போதைய ஊழல் அரசுடன் கைகோர்க்க மாட்டோம் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் அறிவித்துள்ளார். எதிர்க்கட்சி மக்களின் விருப்பத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும், எனவே அரசை காப்பாற்ற கூட்டு அரசில் இணைய மாட்டோம் என்றார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு

ஜனாதிபதியின் அழைப்பை ஏற்றுக்கொள்வதில்லையென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

அத்துடன், தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி ஆகியனவும் அழைப்பை நிராகரித்துள்ளன.

தமிழ் முற்போக்கு கூட்டணி

ஜனாதிபதியின் அழைப்பை நிராகரிப்பதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் அறிவித்தார்.

அத்துடன், ஜேவிபி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்தன.

spot_imgspot_img

More like this
Related

‘மென்மையான தண்டனை வழங்குங்கள் என கேட்க வெட்கப்படுகிறேன்’: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பயங்கரவாதிகள் நீதிமன்றத்தில் கூறியவை!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான முக்கிய வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள்...

யாழ்ப்பாண ஐயா, மலையகத்தில் செய்த மோசடி வேலை!

நிதி மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக நுவரெலியா பிரிவு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இருவரை...

புகையிரதம் மோதி ஒருவர் பலி

யாழ்ப்பாணம் - அரியாலை புங்கன்குளம் பகுதியில் உள்ள புகையிரதத்துடன் மோதுண்டு ஒருவர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்