25.9 C
Jaffna
March 29, 2024
முக்கியச் செய்திகள்

மஹிந்த பதவிவிலகும் தகவலை பிரதமர் அலுவலகம் மறுப்பு!

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ பதவிவிலகும் தகவல்கள் தவறானவை என பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சற்று முன்னர் பிரதமர் ஊடகப்பிரிவு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.


மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.

இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தில் இருந்து வெளியேறும் என ஜனாதிபதியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பிரதமரின் இராஜினாமா தொடர்பான கடிதம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், இன்று இரவு ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் பதவி விலகியவுடன் அமைச்சரவை கலைக்கப்படும்.

சர்வ கட்சிகளையும் கொண்ட இடைக்கால அரசாங்கமொன்று உடனடியாக அமைக்கப்படும்.

புதிய அரசாங்கத்தின் பிரதமராக பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளார். புதிய பிரதமராக தினேஷ் குணவர்த்தனவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ள போதும், அது இறுதி செய்யப்படவில்லை.

இடைக்கால அரசின் நிதியமைச்சராக பசில் ராஜபக்சவிற்கு பதிலாக, ஐக்கிய மக்கள் சக்தியின் ஹர்ஷ டி சில்வாவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

4 ஆம் திகதி மைத்திரியை நீதிமன்றத்தில் வாக்குமூலமளிக்க உத்தரவு!

Pagetamil

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசிய ஞானசாரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை!

Pagetamil

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை கோரி ஐ.நா பாதுகாப்புசபையில் தீர்மானம்!

Pagetamil

இலங்கைக்கு பெரு வெற்றி

Pagetamil

Leave a Comment