2 வருடங்களின் பின் நடிக்க வந்த அனுஷ்கா: பிரபாஸுடன் கூட்டணி?

Date:

நடிகை அனுஷ்கா ஷெட்டி இரண்டு வருடங்கள் கழித்து மீண்டும் திரையுலகுக்கு திரும்பியுள்ளார்.

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்தவர் அனுஷ்கா. பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களும் அவருக்கான புகழை அதிகரித்தது. ஆனால், அதன்பிறகு பெரிதான படங்களில் நடிக்கவில்லை.

கடைசியாக அவர் நடிப்பில் வெளியான படம் 2020ல் வெளிவந்த நிசப்தம். அதன் பிறகு படங்களில் நடிக்காமல் இருந்து வந்தவர், கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு திரையுலகுக்கு ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளார்.

ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா, ஜதி ரத்னலு போன்ற படங்களில் ஹீரோவாக நடித்த நவீன் பொலிஷெட்டியின் புதிய படத்தில் அனுஷ்கா நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதில் 40 வயது பெண் கேரக்டரில் நடிக்கவுள்ளார் என்று சொல்லப்படுகிறது.

பான் இந்தியா படமாக இது தயாராகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், மற்றொரு படத்திலும் அனுஷ்கா நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அது நடிகர் பிரபாஸின் அடுத்த படம்தான். பிரபல தெலுங்கு இயக்குநர் மாருதி பிரபாஸை வைத்து ’ராஜா டீலக்ஸ்’ என்கிற படத்தை எடுக்கவிருக்கிறார். இதில் பிரபாஸுக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

பிரபாஸ் அனுஷ்கா இருவரும் ஏற்கனவே இணைந்து நடித்ததால் இருவரும் மீண்டும் இணைவது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

நற்பிட்டிமுனை லாபீர் வித்தியாலயத்தில் இடம்பெற்ற ‘சித்திரக் கண்காட்சி 2026’

மாணவர்களின் ஆக்கத்திறனை வெளிக்கொண்டுவரும் நோக்கில் நற்பிட்டிமுனை லாபீர் வித்தியாலயத்தில்  கோலாகலமாக இடம்பெற்ற...

யாழில் பிரபல பாடசாலைக்குள் வைத்து அதிபர், ஆசிரியர்களால் ‘கும்மி’ எடுக்கப்பட்ட மாணவன்!

யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல பாடசாலையொன்றின் அதிபர், ஆசிரியர்களால் தாக்கப்பட்டதாக குறிப்பிட்ட பாடசாலை மாணவன்...

போதைப்பொருளுடன் பெண் கைது!

புத்தளம் விசேட போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர், பாலாவி பகுதியில் முக்கிய போதைப்பொருள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்