28.7 C
Jaffna
June 30, 2022
முக்கியச் செய்திகள்

இலங்கை முழுவதும் சமூக ஊடகங்கள் தடை!

இலங்கை முழுவதும் சமூக ஊடகங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

இன்று அதிகாலை முதல் பேஸ்புக், ருவிற்றர், வட்ஸ்அப், வைபர், யூரியூப் உள்ளிட்ட பல சமூக ஊடகங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

பொருளாதார நெருக்கடிக்கு அரசாங்கத்தின் தவறான முகாமைத்துவமே காரணமென்பதால், அரசு உடனடியாக பதவிவிலக வேண்டுமென வலியுறுத்தி◌ாடளாவிய ரீதியில் உருவாகியுள்ள எதிர்ப்புகளை எதிர்கொள்ள அரசாங்கம் ஊரடங்குச் சட்டத்தை விதித்து, அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்திய நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

நிகழ்நேர நெட்வொர்க் தரவுகள், பல வழங்குநர்களிடையே நள்ளிரவில் கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ளதை உறுதி செய்கின்றன.

நாடு தழுவிய சமூக ஊடக கட்டுப்பாடுகளின் வரலாற்றை இலங்கை கொண்டுள்ளது. அப்போது VPN சேவைகள் பிரபலமடைந்தன.

VPN சேவைகளை பயன்படுத்துவதன் மூலம் சமூக ஊடக தளங்களை மறைமுகமாக அணுகலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

ரஷ்யா- உக்ரைன் பிரதிநிதிகள் துருக்கியில் சந்திக்கின்றனர்!

Pagetamil

ஜனாதிபதி தேர்தலில் தமிழர்களின் முடிவு தீர்க்கதரிசனமானது; கோட்டாவிற்கு வாக்களித்தவர்கள் வீதியில் அலைகிறார்கள்: யாழில் சுட்டிக்காட்டினார் எரான்!

Pagetamil

கொரோனாவின் மூலத்தை அறியும் கடைசி முயற்சியில் இறங்கியது உலக சுகாதார நிறுவனம்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!