கஜமுத்து விற்ற முன்னாள் பிரதியமைச்சருக்கு விளக்கமறியல்

Date:

சட்டவிரோதமான முறையில் கஜமுத்து வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ், கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பண்டு பண்டாரநாயக்க உள்ளிட்ட 5 பேரையும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அம்பாறை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

10 மில்லியன் ரூபா பெறுமதியான மூன்று முத்துக்களை விற்பனை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் கம்பஹா மாவட்ட முன்னாள் பிரதி அமைச்சர் பாண்டு பண்டாரநாயக்க உள்ளிட்ட ஐவர் நேற்று (25) பிற்பகல் அம்பாறை விருந்தினர் இல்லத்தில் வைத்து  விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

3 கஜமுத்துக்களை 10 மில்லியன் ரூபாவிற்கு விற்பனை செய்ய குழுவொன்று முயற்சிக்கும் தகவல் கிடைத்ததையடுத்து, அம்பாறை விசேட அதிரடிப்படையினர் முத்துக்களை கொள்வனவு செய்பவர்களாக நடித்து, 3 முத்துக்களையும் வாங்குவதாக குறிப்பிட்டுள்ளனர்.

இதன்படி பிரதியமைச்சர் குழு, முத்துக்களுடன் அம்பாறைக்கு வந்துள்ளது.

அம்பாறை நகர மையத்தில் கஜமுத்து விற்பனையில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் முன்னாள் பிரதி அமைச்சருடன் கைது செய்யப்பட்ட பெண் ஒருவரையும் மேலும் இருவரையும் ஜீப் வண்டியின் சாரதியுமே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதியமைச்சர் கம்பஹாவை வசிப்பிடமாகவும், பெண் கடவத்தையை வசிப்பிடமாகவும், ஏனையவர்கள் அம்பாறை மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களை வசிப்பிடமாகவும் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபராக ஒஷான் ஹேவா விதாரண கடமையேற்பு

யாழ்ப்பாண மாவட்டத்தின் புதிய பிரதி பொலிஸ் மா அதிபராக ஒஷான் ஹேவா...

யாழில் கணவனை கொன்ற மனைவிக்கு மரணதண்டனை

யாழ்ப்பாணம் - அரியாலை, பூம்புகார் பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் ஒன்றுடன்...

வல்வெட்டித்துறையில் எழுச்சியுடன் கொண்டாடப்பட்ட தலைவரின் பிறந்தநாள்

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்