29.5 C
Jaffna
March 28, 2024
தமிழ் சங்கதி

ஜனாதிபதியின் முன் வெளிப்பட்ட தமிழ் அரசு கட்சியின் உள்ளக சிக்கல்!

இலங்கை தமிழ் அரசு கட்சிக்குள் நிலவும் உள்ளக முரண்பாடு ஒன்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்பாக வெளிப்பட்ட சுவாரஸ்ய சம்பவம் நடந்தது.

ஜனாதிபதி கோட்டாபயவிற்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளான தமிழ் அரசு கட்சி, புளொட் என்பனவற்றிற்கும் இடையில் நேற்று நடந்த கலந்துரையாடலில் இந்த சம்பவம் நடந்தது.

இலங்கை தமிழ் அரசு கட்சிக்குள் நடக்கும் கலந்துரையாடல்கள் பலவற்றில், எம்.ஏ.சுமந்திரனின் சில நடவடிக்கைகளை, அணுகுமுறைகளை சுட்டிக்காட்டி, கண்டித்து வருபவர் சி.சிறிதரன்.

குறிப்பாக, தன்னை மையப்படுத்திய சுமந்திரனின் நடவடிக்கைகள், தானே அனைத்தையும் செய்வதை போன்ற தோற்றத்தை உருவாக்கும் நடவடிக்கைகளை கட்சியின் உள்ளக கூட்டங்களில் சிறிதரன் சுட்டிக்காட்டி வந்துள்ளார்.

இப்படியான கூட்டமொன்றில், ‘நாங்கள் என்றே சிந்திக்க மாட்டீர்களா?…நான், நான் என்று மட்டுமா சிந்திப்பீர்கள்?’ என்றும் காட்டமாக கேட்டிருந்தார்.

இப்படியான கேள்விகள் எழுப்பப்படும் சமயங்களில் எம்.ஏ.சுமந்திரன் பதிலளிப்பதில்லை.

நேற்று ஜனாதிபதியுடன் சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது, இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அங்கு பேசுவதற்கான சூழல் அமையவில்லையென விசனப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதியுடனான சந்திப்பிற்கு முன்னதாக நடந்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டத்தில், ‘அனைவரும் உங்கள் உங்கள் மாவட்டங்களில் நடக்கும் பிரச்சனைகளை, பேச வேண்டிய விடயங்களை தயார் செய்து கொண்டு வந்து பேசுங்கள்’ என இரா.சம்பந்தன் குறப்பிட்டிருந்தார்.

ஆனால், ஜனாதிபதியுடனான கலந்துரையாடலில் அதற்கான வாய்ப்பு இருக்கவில்லை.

தமிழ் அரசு கட்சியின் எம்.பிக்கள் ஏதாவது பிரச்சனையை குறிப்பிட ஆரம்பிக்க, உடனேயே சுமந்திரன் தலையிட்டு, அந்த விடயத்தை ஜனாதிபதிக்கு விளக்கமளித்துக் கொண்டிருந்தார்.

அதாவது, வில்லுப்பாட்டு பக்கப்பாட்டுக்காரர்கள் போல, ஒரு விடயத்தின் முதல் வரியை எடுத்துக் கொடுத்துக் கொண்டிருப்பவர்களாக தமிழ் அரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். தலைவர் மாவை சேனாதிராசாவிற்கும் அதுதான் கதி.

தமிழில் பேசும் உறுப்பினர்களிற்கும் வாய்ப்பாக, மொழிபெயர்ப்பு வசதியும் செய்யப்பட்டிருந்தது. என்றாலும், சுமந்திரனின் தலையீடு அதிகமாக – அந்த குழுவிற்கே தான் தலைவர் என்பதை போல நடந்து கொண்டிருந்தார்.

சி.சிறிதரன் இரண்டு மூன்று முறை பேச முற்பட்ட போதும், அவருக்கும் பக்கப்பாட்டுக்காரனின் நிலையே ஏற்பட்டது.

இதனால் அவர் கோபமடைந்து விட்டார்.

மீண்டும் அவர் பேச ஆரம்பிக்க, வழக்கம் போல சுமந்திரன் அதன் தொடர்ச்சியை ஆரம்பிக்க… சிறிதரன் கடுப்பாகி விட்டார்.

சற்று உரத்த குரலில் ‘எங்களையும் கொஞ்சம் கதைக்க விடுகிறீர்களா?’ என காட்டாக கேட்டார்.

இதன் பின்னரே சுமந்திரன் குறுக்கீட்டை நிறுத்தினார்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
2
+1
1
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் சிறிதரனை மௌனமாக்கியது எது?

Pagetamil

வெடுக்குநாறிமலை அட்டூழியம்: தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்ட முஸ்தீபு!

Pagetamil

தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு எதிராக செயற்பட்டதால் கடல் கடக்க அனுமதிக்க முடியாது: வி.மணிவண்ணனின் கோரிக்கையை நிராகரித்த பாதுகாப்பு அமைச்சு!

Pagetamil

‘திருகோணமலை குழப்பத்துக்கு முடிவில்லாமல் கட்சியின் தேசிய மாநாட்டை நடத்த வேண்டாம்’: தமிழ் அரசு கட்சியின் தலைமைக்கு இரா.சம்பந்தன் மீண்டும் அறிவித்தல்!

Pagetamil

‘எனது ஆதரவாளர்கள் புறமொதுக்கப்படுகிறார்கள்’: சுமந்திரனை தடுப்பது உத்தியா?; சம்பந்தனின் புகாரின் பின்னணி!

Pagetamil

Leave a Comment