பல முக்கிய வர்த்தக வங்கிகளில் இன்று (25) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 297 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.
வரலாற்றில் முதல் தடவையாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மிக மோசமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
பல முன்னணி வர்த்தக வங்கிகளின் புதுப்பிக்கப்பட்ட தரவுகளின்படி, இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 290-297 ரூபாவாக இருந்தது.
மத்திய வங்கியினால் இன்று வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதத்தின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 279.9056 ரூபாவாகவும் விற்பனை விலை 289.9960 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.




