ருமேனிய-ஹங்கேரிய எல்லையில் உள்ள நாட்லாக் II எல்லைச்சாவடியில் இரண்டு வாகனங்களிற்குள் பதுங்கியிருந்த 16 கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுமார் 24 மணித்தியால இடைவெளிக்குள், அந்த சோதனைச் சாவடி ஊடாக ஹங்கேரிக்குள், செமி டிரெய்லர் டிரக் மற்றும் இரண்டு மினிபஸ்களில் பதுங்கியிருந்து நுழைய முயன்ற 38 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 16 பேர் இலங்கையர்கள்.
ருமேனியாவில் பதிவுசெய்யப்பட்ட மினிபஸ்கள் முறையே 33 மற்றும் 42 வயதுடைய இரு ருமேனியர்களால் இயக்கப்பட்டன, மேலும் எல்லைச் சோதனையின் போது, சரக்கு பெட்டிக்கும் பயணிகளுக்கான பெட்டியின் பின்புற இருக்கைக்கும் இடையில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இடங்களில் புலம்பெயர்ந்தோர் மறைந்திருப்பது கண்டறியப்பட்டது.
சட்டப்பூர்வமாக ருமேனியாவிற்குள் நுழைந்து, ஐரோப்பிய நாடுகளிற்குள் தஞ்சம் புகுவதற்காக வாகனங்களில் மறைந்து நுழைந்த போது இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைதான இலங்கையர்கள் 22 – 51 வயதுடையவர்கள்.
சில நிமிடங்களுக்குப் பிறகு, அதே எல்லைக் கடவையில், இத்தாலியில் பதிவுசெய்யப்பட்ட காரில் ஒரு ரோமானிய குடிமகனுடன் வந்த இலங்கையர் ஒருவரும் சிக்கினார்.




