வரிசையில் வாடும் மக்கள்; வந்து சேராத எரிவாயு!

Date:

நிந்தவூர் வைத்தியசாலை வீதியில் எரிவாயு கேஸ் கொள்வனவு செய்வதற்காக இன்று (25) அதிகாலை முதல் மக்கள் நீண்ட கியூ வரிசையில் காத்திருக்கின்றனர்.

எரிபொருள் மற்றும் எரிவாயு ஆகியவற்றின் விநியோகம் இவ்வாரம் முதல் வழமைக்குத் திரும்பும் என இலங்கை அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் கடந்த வாரம் தெரிவித்துள்ள போதிலும் எரிபொருள் மற்றும் எரிவாயு ஆகியவற்றிற்கான விநியோகம் இன்னும் வழமைக்குத் திரும்பவில்லை.

இதனால் மக்கள் எரிவாயு மற்றும் எரிபொருள் ஆகியன வந்து சேரும் என எதிர்பார்த்து வீதிகளிலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் கியூவில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலைமை ஏற்பட்டுள்ளதுடன், இதுவரை எரிபொருள் கொள்வனவுக்காக நின்ற பலர் உயிரிழந்துள்ள சம்பவமும் இலங்கையில் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதேநேரம் நிந்தவூர் பிரதேசத்தில் நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்கு அருகில் இருந்து ஆரம்பித்துள்ள எரிவாயு கொள்வனவு வரிசை கடற்கரை வீதியில் சென்று சுமார் 200 மீட்டர் தூரம் நீண்டு சென்றுள்ளது. இருந்த போதும் இன்னும் இந்த இடத்திற்கு எரிவாயு வந்து சேரவில்லை எனவும் அங்குள்ள மக்கள் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்

spot_imgspot_img

More like this
Related

தட்டம்மை பரவல்: 3 சிறைச்சாலைகளிலிருந்து கைதிகள் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்படவில்லை!

தட்டம்மை நோய் பரவல் காரணமாக, மூன்று சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளை இன்று...

பிரதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க முறையான தகுதியுடைய ஆசிரியரல்ல: புதிய குற்றச்சாட்டு!

பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, பல்கலைக்கழகம், தேசிய கல்விக்கல்லூரி அல்லது ஆசிரியர்...

ஹெரோயின், கஞ்சா கலந்து அடித்துவிட்டு பிக்குகள் போராட்டத்தில் பங்கேற்ற ஆசாமி!

அனுராதபுர புனிதப் பகுதியில் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பலாங்கொட கஸ்ஸப தேரருடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்