ரஷ்யா – உக்ரைன் கைதிகள் பரிமாற்றம்!

Date:

ரஷ்யாவும் உக்ரைனும் கைதிகளை பரிமாறிக்கொண்டுள்ளன.

“ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் உத்தரவைத் தொடர்ந்து, முதல் முழு அளவிலான போர்க் கைதிகள் பரிமாற்றம் நடந்தது” என்று உக்ரைன் துணைப் பிரதமர் இரினா வெரேஷ்சுக் பேஸ்புக்கில் எழுதினார்.

“பிடிக்கப்பட்ட 10 ரஷ்ய படையினருக்கு ஈடாக நாங்கள் எங்கள் 10 படைவீரர்களை மீட்டோம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

கருங்கடல் துறைமுக நகரமான ஒடேசாவிற்கு அருகில் 11 ரஷ்ய சிவிலியன் மாலுமிகள் உக்ரைன் இராணுவத்தால் பிடிக்கப்பட்டிருந்தனர். பதிலடியாக, 19 உக்ரேனிய சிவிலியன் கப்பல் பணியாளர்களை ரஷ்யா பிடித்தது.

இப்பொழுது இவர்கள் பரிமாறப்பட்டுள்ளனர்.

“உக்ரேனியப் பிரதேசத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 10 ரஷ்ய படைவீரர்களை 10 உக்ரேனியப் படைவீரர்களுக்கு பரிமாறிக் கொண்டது தொடர்பான தகவலை நான் உறுதிப்படுத்துகிறேன். மேலும் உக்ரேனிய சிவிலியன் மாலுமிகளுக்கு ரஷ்ய சிவிலியன் மாலுமிகளின் பரிமாற்றமும் நடந்தது” என்று ரஷ்ய மனித உரிமைகள் அமைப்பின் டாடியானா மொஸ்கல்கோவா கூறினார்.

கடந்த மாத இறுதியில் உக்ரைன் மீதான படையெடுப்பைத் தொடங்கியதிலிருந்து இரண்டு கைதிகள் பரிமாற்றம் நடந்தது என ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகம் கூறியது.

ரஷ்ய இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட தென்கிழக்கு உக்ரைனில் உள்ள மெலிடோபோல் நகரின் மேயருக்கு பதிலாக ஒன்பது ரஷ்ய கைதிகள் பரிமாறப்பட்டிருந்தனர். தற்போது, இரண்டாவது முறையாக கைதிகள் பரிமாற்றம் நடந்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

மரத்தில் கட்டிவைக்கப்பட்ட இளைஞன் பொலிஸ் காவலில் உயிரிழந்த சர்ச்சை சம்பவம்!

கொபெய்கனே  பொலிஸாரின் காவலில் இருந்த சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக,...

மேய்ச்சல் தரை விவகாரம்: மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் முன் போராட்டம்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் பாரம்பரியமான மயிலத்தமடு மற்றும் மாதவனை மேய்ச்சல் தரைகளை சட்டவிரோத...

ஐ.ம.ச, ஐ.தே.க கூட்டும் வெற்றி பெறுவது சிரமம்!

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி இடையிலான கூட்டணி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்