கேவலமான அமெரிக்கரை நிதியமைச்சராக வைத்துக்கொண்டு இந்த நாடு இனி முன்னேற முடியாது. அரசின் 11 பங்காளிக் கட்சிகள் ஒன்றிணைந்து இந்த அரசாங்கத்தின் 113 பெரும்பான்மையை விரைவில் அழித்து இந்த மேலாதிக்க ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் தெரிவித்துள்ளார். தேசிய சுதந்திர முன்னணியின் முன்னாள் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.
கண்டியில் மல்வத்து பீடத்தின் மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களிடம் இதனை தெரிவித்தார்.
விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு 11 அரசியல் கட்சிகளால் முன்னெடுக்கப்பட்டுள்ள ரத ஹரிமக வேலைத்திட்டம் தொடர்பில் மாநாயக்க தேரர்களுக்கு விளக்கமளிப்பதற்காக கண்டிக்கு விஜயம் செய்தபோதே இதனைத் தெரிவித்துள்ளார். இதன் போது அஸ்கிரிய, மல்வத்து மகாநாயக்கர்களை சந்தித்து, தமது வேலைத்திட்ட ஆவணங்களை வழங்கினர்.
விமல் வீரவன்ஸ மேலும் தெரிவிக்கையில்,
“முழு நாடும் சரியான பாதையில்’ என்ற பெயரில் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள அரசாங்கத்திற்கு ஒரு வழியைக் காட்டினோம். இதன் விளைவாக இரண்டு அமைச்சர்கள் அரசாங்கத்திலிருந்து நீக்கப்பட்டனர். அதை நாங்கள் மகிழ்ச்சியுடன் எடுத்துக் கொண்டோம். கண்டிக்கு வந்தோம். இன்று 11 கட்சிகள் ஒன்றிணைந்து மேற்கூறிய ‘முழு நாடும் சரி’ என்ற தேசிய வேலைத்திட்டத்தை மகா தேரர்களுக்கு முன்வைக்கும் வகையில், எமது வரவிருக்கும் வேலைத்திட்டத்தை மகாநாயக்கர்களிடம் முன்வைத்தோம்.
இந்த நாட்டுக்கு எதிரான சகல உடன்படிக்கைகளிலும் கைச்சாத்திட்ட பின்னரே அமைச்சரவையில் அவை பற்றி கூறியுள்ளார்கள். இந்த உடன்படிக்கைகள் அனைத்தும் மக்கள் அறியாமலேயே எரிவாயு, எரிபொருள் வரிசைகள் மற்றும் மருந்து வரிசைகளில் காத்திருக்கும் போது கையெழுத்திடப்பட்டது. இன்று நாட்டில் மிகவும் ஆபத்தான நிலை உருவாகியுள்ளது. அந்த நிலை இன்னும் மோசமாகி வருவதை அனுமதிக்க முடியாது. அதனால்தான் இதை மிக மோசமான நேரத்தில் நாட்டுக்கு சொல்ல ஆரம்பித்தோம்.
நேற்று சர்வகட்சி மாநாட்டில் முன்னாள் பிரதமர் ரணிலை அழைத்திருந்தனர். அவர்கள் ரணிலை பயன்படுத்துகிறார்களா அல்லது ரணில் அவர்களை பயன்படுத்துகிறாரா என்பது இங்கு முக்கியமில்லை. அந்த அனைத்துக் கட்சி மாநாட்டில் நிதியமைச்சரின் நடத்தை என்ன என்பதுதான் முக்கியம்.
இப்படிப்பட்ட அசிங்கமான, வேரோடு பிடுங்கப்பட்ட அமெரிக்கனைக் கொண்டு நம் நாடு முன்னேற முடியாது. அந்த முரட்டுத்தனமான ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர, இந்த அரசாங்கத்தின் 113 பெரும்பான்மையை விரைவில் இழக்க நேரிடும்.
எதிர்க்கட்சியில் உள்ள சிலர், நாம் ஒப்பந்தம் செய்து கொண்டு வேலை செய்கிறோம், 2025இல் பசில் ராஜபக்சவை வீழ்த்தி நாமலை கொண்டு வர முயற்சிப்பதாக கூறுகிறார்கள். எந்தவொரு ராஜபக்ஷவையும் கொண்டுவருவதற்கு எமது வாழ்வில் ஆதரவளிக்கும் நம்பிக்கை எமக்கு இல்லை. நாங்கள் இதுபோன்ற நடவடிக்கை எடுப்பதால், தங்கள் ‘மார்க்கெட் ஷேர்’ மீது தாக்குதல் நடத்துவார்களோ என்று எதிர்க்கட்சிகளில் சிலர் பயப்படுகிறார்கள். நாங்கள் இந்த நாட்டை நேசிப்பதால் அரசியல் செய்கிறோம், பதவிகள் பற்றி கவலைப்படாமல், பதவிகளை துறக்கும் மனநிலையில் உள்ளோம்.
2019 ஜனாதிபதித் தேர்தல் மேடையில் நீங்கள் கூறியதற்கு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையா? என ஊடகவியலாளர் கேள்வியெழுப்பிய போது,
இந்த தவறை மக்கள் கண்டிருந்தால் நாம் மன்னிப்பு கேட்க வேண்டும். அந்த தவறை எதிர்த்து நின்ற நாங்கள் மன்னிப்பு கேட்க வேண்டியதில்லை. நாங்கள் நியமிக்கும் அரசாங்கம் தவறு செய்தால் அதற்கு எதிராக நிற்போம் என்று அப்போது கூறினோம். அப்படிச் சொல்லிவிட்டு செய்யாமல் இருந்தால்தான் மன்னிப்புக் கேட்க வேண்டும். இப்போது உருவாக்க முயற்சிக்கப்படும் உலகம், சஜித் பிரேமதாச உருவாக்க முயற்சித்த உலகத்தை விட ஆபத்தானது என்றார்.
ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார, பிவித்துரு ஹெல உறுமய தலைவர் உதய கம்மன்பில, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச, வீரசுமண வீரசிங்க, ஐக்கிய மக்கள் கட்சியின் சார்பில் டிரன் அலஸ் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.