22 வயது இளம்பெண்ணை நண்பர்களிற்கு விருந்தாக்கிய காதலன்: தி.மு.க பிரமுகர் உள்ளிட்ட 4 பேர் கைது!

Date:

விருதுநகரில் கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் வேலைபார்த்த 22 வயது இளம்பெண்ணை ஆபாசப்படம் எடுத்த காதலன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அந்த பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளான்.

விருதுநகர் மேலத்தெருவைச் சேர்ந்தவன் ஹரிஹரன் (27), தனியார் கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்த இவன் அங்கு வேலைபார்த்து வந்த 22 வயது இளம்பெண்ணை காதல் வலையில் வீழ்த்தி உள்ளான்.

இளம்பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி தனிமையான இடத்திற்கு அழைத்துச்சென்ற ஹரிஹரன் உடலுறவு கொண்டு, அதனை வீடியோவாக பதிவுசெய்து வைத்துக் கொண்டான்.

தனது செல்போனில் இருந்த இந்த ஆபாச வீடியோவை தனது நண்பர்களுக்கு அனுப்பியுள்ளான் ஹரிஹரன், இந்த வீடியோவை பார்த்த அவனது நண்பர்களான ஜூனத் அகமது, டிரைவர் பிரவீன் மற்றும் 9ம் வகுப்பு, 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 4 பேரும் தனித்தனியாக அந்த இளம் பெண்ணை மிரட்டி உள்ளனர். ஒரு கட்டத்தில் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவோம் எனக் கூறி பல முறை பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் இந்த காமுகக் கும்பலால் கடுமையாக பாதிக்கப்பட்ட இளம்பெண், தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து, 37 வயதான மாடசாமி என்பவரிடம் கூறியபோது, அந்த வீடியோவை தனது செல்போனுக்கு பார்வர்டு செய்துகொண்ட மாடசாமியும் அந்த இளம்பெண்ணை மிரட்டி அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். அடுத்தடுத்த நபர்களை நம்பி பாதிக்கப்பட்ட இளம்பெண் இதுகுறித்து பாண்டியன் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

பலாத்கார வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், ஹரிஹரன், மாடசாமி, பிரவீன், திமுக பிரமுகர் ஜூனத்அகமது மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேரையும் போலீசார் கைதுசெய்தனர்.

ஹரிஹரன் உள்ளிட்ட 4 பேரை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 4 மாணவர்களும் சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

spot_imgspot_img

More like this
Related

நீதிமன்றத்தில் வெளியான சுரேஸ் சல்லேவின் மருத்துவ அறிக்கை

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காகக் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கின் தீர்ப்பு; 15 பேர் குற்றவாளிகள்: 9 பேர் விடுவிப்பு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் 15 பிரதிவாதிகள் குற்றவாளிகளாகக்...

அனோஜன் விவகாரம்: பிரதி சபாநாயகர் தலைமையில் சவுதி செல்லும் நாடாளுமன்றக்குழு!

புலம்பெயர் தொழிலாளி அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக இலங்கை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்