எங்குமே இல்லாத ஆச்சரியம்; வானத்தையும் விற்றது கோட்டா அரசு!

Date:

இலங்கையின் வான் வெளியானது, 29 மில்லியன் டொலருக்கு இந்தியாவுக்கு விற்கப்பட்டுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

ஹப்புத்தளையில் உள்ள சுற்றுலா ஹோட்டலில் நேற்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஹரீன் பெர்னாண்டோ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

விசேஷமாக ஏதாவது சொல்ல வேண்டும் என்பதால் கிராமத்திற்கு வந்து பத்திரிகையாளர் சந்திப்பு நடத்த முடிவு செய்தேன்.

இன்று பாராளுமன்ற தினம் என்றாலும் அவசர விஷயமாக இந்தப் பகுதியில் தங்கியிருக்கும் போது சொல்ல வேண்டிய ஒன்று இருக்கிறது.

இலங்கையில் இன்று மக்கள் பெரும் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். மக்கள் வீதியில் வரிசையில் செத்து மடிகின்றனர்.

நேற்று அமைச்சரவைக்கு ஏழெட்டு அற்புதமான தீர்மானங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. இந்நிலையில் இலங்கையின் பாதுகாப்பு எனக் கூறி எமது இலங்கை வானங்கள் இந்தியாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன. இலங்கைப் பெருங்கடல் சீனாவுக்குக் கொடுக்கப்பட்டது. நிலம் சீனாவுக்கு வழங்கப்பட்டது. துறைமுகம் அமெரிக்காவுக்கு வழங்கப்பட்டது. இப்போது இந்தியாவுக்கு 29 மில்லியன் டொலர்களுக்கு வானம் விற்கப்பட்டுள்ளது.

வானத்தை விற்பனை செய்வது இதுவே முதல் முறை. கடன் வாங்குவதற்கு முடிவே இல்லை. இலங்கை மக்களின் வாழ்க்கைக்கான  உரிமை கூட இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது இந்தியன் எலக்ட்ரோனிக்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த ‘வீரன்’ இலங்கை பாதுகாப்பை இந்தியாவிற்கு விற்றுள்ளார். எண்ணெய் கச்சா ஒப்பந்தத்தையும் செய்கிறது. இலங்கையில் மக்கள் வரிசையில் நின்று அவதிப்படுகின்றனர் என்றார்.

spot_imgspot_img

More like this
Related

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கின் தீர்ப்பு; 15 பேர் குற்றவாளிகள்: 9 பேர் விடுவிப்பு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் 15 பிரதிவாதிகள் குற்றவாளிகளாகக்...

அனோஜன் விவகாரம்: பிரதி சபாநாயகர் தலைமையில் சவுதி செல்லும் நாடாளுமன்றக்குழு!

புலம்பெயர் தொழிலாளி அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக இலங்கை...

நிறுத்தாமல் சென்ற கார்: கண்ணாடியை உடைத்து சாரதியை கைது செய்த பொலிசார்!

கிரியுல்ல பகுதியில் காவல்துறையினரின் நிறுத்த உத்தரவைப் புறக்கணித்து அதிவேகமாகச் சென்ற சொகுசு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்