திடீர் ஓய்வை அறிவித்தார் நம்பர் 1 வீராங்கணை ஆஷ்லி பார்ட்டி!

Date:

அவுஸ்திரேலிய டென்னிஸ் வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி, சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் உலகின் நம்பர் 1 வீராங்கனையாக திகழ்ந்து வருகிறார். தொடர்ந்து பல வெற்றிகளை குவித்து வந்த ஆஷ்லி பார்ட்டி, தனது 25வது வயதில் ஓய்வு முடிவை அறிவித்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர், தனக்கு தனிப்பட்ட முறையில் பல கனவுகள் உள்ளதாகவும், ஆனால் உலகம் முழுவதும் சுற்றி தனது குடும்பத்தையும், சொந்த ஊரையும் பிரிந்து இருக்க தன்னால் முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் டென்னிஸ் விளையாட்டை தான் மிகவும் நேசிப்பதாகவும், தனது வாழ்வில் அது என்றும் ஒரு அங்கமாக இருக்கும் என்று கூறியுள்ள அவர், தனது வாழ்வின் அடுத்த பகுதியை ஒரு விளையாட்டு வீராங்கனையாக இல்லாமல், ஒரு சாதாரண நபராக அனுபவிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

ஆஷ்லி சுமார் 121 வாரங்களாக உலகின் நம்பர் 1 வீராங்கனையாக திகழ்ந்துள்ளார். குறுகிய காலத்தில் 15 சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்றுள்ள அவர், அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ், 3 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள், 2021 விம்பிள்டன் கோப்பை, 2019 பிரன்ஞ்ச் ஓபன் டென்னிஸ் கோப்பை ஆகியவற்றை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

னோஜனின் குடும்பத்திற்கு ரிஷாட் பதியுதீன் நேரில் ஆறுதல்: விடுதலைக்காகத் தீவிர முயற்சி

சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கல்முனை, நற்பிட்டிமுனையைச்...

சஹ்ரானைக் கண்டதுமில்லை-பேசியதுமில்லை-ரிசாட் பதியுதீன்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிமுடன் தனக்கு...

யாழில். இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் , சேந்தான்குளம் பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் சேத்தான்குளம் பகுதியில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்