டொலர் தட்டுப்பாடு காரணமாக இரண்டு தூதரகங்கள் மற்றும் ஒரு துணைத் தூதரகத்தை மூட வெளிவிவகார அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதன்படி, ஈராக்கின் பாக்தாத்தில் உள்ள இலங்கை தூதரகம், நோர்வேயின் ஒஸ்லோவில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள துணை தூதரகம் ஆகியவற்றை இம்மாதம் 31ஆம் திகதி முதல் மூட வெளிவிவகார அமைச்சு தீர்மானித்துள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான டொலர் நெருக்கடியை கருத்திற் கொண்டு வெளிவிவகார அமைச்சு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
அதன்படி, டுபாயில் உள்ள தூதரகத்தின் ஊடாக ஈராக் தூதரக பணிகளும், ஸ்வீடனில் உள்ள ஸ்டாக்ஹோமில் உள்ளதூதரகம் வழியாக நோர்வே தூதரக பணிகளும் மற்றும் அவுஸ்திரேலியாவின் கன்பராவில் உள்ள உயர் ஸ்தானிகராலயத்தின் ஊடாக சிட்னி துணைத் தூதரக பணிகளையும் மேற்கொள்ள ஏற்பாடாகியுள்ளது.
தற்போதுஇலங்கை 63 தூதரகங்களை பராமரித்து வருகிறது, இந்த மூன்று அலுவலகங்களும் மூடப்படுவதால் அவை 60 ஆக குறைக்கப்படும்.
டொலர் நெருக்கடி காரணமாக 60 இலங்கை தூதரகங்களின் செயற்பாடு பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.




