யாழ் விபத்தில் ஒருவர் பலி!

Date:

யாழ்ப்பாணம் மூளாய் பகுதியில் நேற்று (20) இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மற்றொருவர் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் கணக்காளராக பணியாற்றும் காரைநகர் கருங்காலியை சேர்ந்த சங்கரப்பிள்ளை நித்தியானந்தராசா (49) என்பவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழக மாணவனான மூளாயைச் சேர்ந்த ஆனந்தகுமார் கஜீபன் என்ற இளைஞரே காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மூளாய் – மாவடி வீதியில், காளி கோயிலுக்கு சமீபமாக இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

அரசாங்கத்தின் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை சீர்குலைக்க எதிர்க்கட்சிகள் முயற்சி

சமீப காலங்களில் மோசடி மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான சில அரசியல்வாதிகள்...

நடிகை அம்பிகா ரூ.46 கோடி காசோலை மோசடி செய்ததாக தங்கை ராதா புகார்

சுமார் ரூ.46 கோடி பணத்தை காசோலை மூலமாக மோசடி செய்ததாக நடிகை...

சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளராக ஜாஹிர் கான் நியமனம்

சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் தலைமை பயிற்சியாளராக இந்திய கிரிக்கெட்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்