டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைக்கான ஒப்பந்தம் இன்று அமைச்சரவையில்: அதற்கும் இந்தியாவே உதவி!

Date:

இந்தியாவின் நிதியுதவியுடன் நாட்டில் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டையை அறிமுகப்படுத்துவதற்கான ஒப்பந்தம் இன்று அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என தொழில்நுட்ப அமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விஜயத்தின் போது இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என அமைச்சின் செயலாளர் ஜயந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இலங்கைக்கு 8 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் உறுதியளித்துள்ளதாக செயலாளர் தெரிவித்தார்.

இதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கான அமைச்சரவை அங்கீகாரம் அண்மையில் வழங்கப்பட்டது.

பயோமெட்ரிக் தகவல் மூலம் குடிமக்களை அடையாளம் காண்பதை எளிதாக்குவதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த வருடம் நவம்பர் மாதம் முதல் பிரஜைகளுக்கான டிஜிட்டல் தேசிய அடையாள அட்டையை அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜயந்த டி சில்வா குறிப்பிட்டார்.

spot_imgspot_img

More like this
Related

அரசாங்கத்தின் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை சீர்குலைக்க எதிர்க்கட்சிகள் முயற்சி

சமீப காலங்களில் மோசடி மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான சில அரசியல்வாதிகள்...

நடிகை அம்பிகா ரூ.46 கோடி காசோலை மோசடி செய்ததாக தங்கை ராதா புகார்

சுமார் ரூ.46 கோடி பணத்தை காசோலை மூலமாக மோசடி செய்ததாக நடிகை...

சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளராக ஜாஹிர் கான் நியமனம்

சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் தலைமை பயிற்சியாளராக இந்திய கிரிக்கெட்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்