யாழில் அதிகளவான ஹெரோயின் உட்கொண்ட இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்புத்துறை பகுதியை சேர்ந்த 28 வயதான இளைஞன் ஒருவரே நேற்று முற்பகல் வீட்டில் உயிரிழந்தார்.
இந்த இளைஞன் கடந்த 4 வருடங்களாக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளார். அதிகமான போதைப்பொருளை உட்கொள்வது, திருட்டுக்களில் ஈடுபடுவது, வீட்டில் பணம் கேட்டு தகராற்றில் ஈடுபடுவது என காலத்தை கழித்துள்ளார்.
அவரை போதைப்பொருள் புனர்வாழ்வு மையத்திற்கு அனுப்ப பெற்றோர் முயற்சித்துக் கொண்டிருந்தனர்.
நேற்றுக்காலையில் போதைப்பொருள் அதிகளவாக உட்கொண்டு விட்டு வீடு வந்த இளைஞன், திடீரென நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சரிந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.
பிரேத பரிசோதனையில் அதிகளவான ஹெரோயின் உட்கொண்டதே மரணத்திற்கு காரணம் என தெரிய வந்துள்ளது.
இம்மாதம் 4ஆம் திகதி தெல்லிப்பழை, கட்டுவன் மேற்கில் 19 வயதான இளைஞன் ஒருவரும் அதிகளவான போதை மாத்திரை உட்கொண்டு உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




