கண்டியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நீண்ட நேரம் வரிசையில் நின்ற 70 வயதுடைய முதியவர் ஒருவர், நோயாளர் காவு வண்டியின் மூலம் கண்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் உடதலவின்ன பகுதியைச் சேர்ந்த 70 வயதான மொஹமட் இல்லியாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இறந்தவர் மண்ணெண்ணெய்க்காக நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்ததாகவும், கண்டியில் கடுமையான வெயிலை தொடர்ந்து, அடை பெய்த நிலையில், அவர் வரிசையில் விழுந்ததாகவும் நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.




