இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால்மா பக்கெட் ஒன்றின் விலை 250 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால்மா பக்கெட் ஒன்றின் புதிய விலை 790 ரூபாவாக அதிகரித்துள்ளது.
உலக சந்தையில் பால் மாவின் விலை அதிகரிப்பு மற்றும் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி காரணமாக மீண்டும் பால் மாவின் விலையை அதிகரிக்க வேண்டியுள்ளதாக பால் மா இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்தது.




