பிள்ளைகளை பாடசாலையிலிருந்து அழைத்து வர சென்ற தாய் பலி: முச்சக்கர வண்டி சாரதியின் பொறுப்பற்ற தனத்தால் விபத்து!

Date:

மீசாலைப் பகுதியில் முச்சக்கர வண்டியினால் மோதி, படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூன்று பிள்ளைகளின் தாய் சிகிச்சை பலனின்றி நேற்று (17) உயிரிழந்துள்ளார்.

கடந்த 14ஆம் திகதி பிற்பகல் 2 மணியளவில் மீசாலை, ஐயா கடையடிப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த பெண் மீது முச்சக்கரவண்டி மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்து காணப்பட்ட அவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

பிள்ளைகளை பாடசாலையிலிருந்து அழைத்து வரச் சென்றபோதே அவர் விபத்தில் சிக்கியுள்ளார்.

எனினும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தள்ளார்.

மீசாலை வடக்கினைச் சேர்ந்த சிறீதரன் செல்வராணி (52) என்பவரே உயிரிழந்தார்.

விபத்தை ஏற்படுத்திய முச்சக்கரவண்டி தப்பிச் சென்றுள்ள நிலையில் முச்சக்கரவண்டி குறித்த தகவல் தருமாறு சாவகச்சேரி பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய இரதோற்சவம் கோலாகலம்!

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய இரதோற்சவம் கோலாகலம்! வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன்...

நேபாளை உலுக்கிய பேரழிவு: 162 பேர் பலி; 400க்கும் மேற்பட்டோர் மாயம்

நேபாளில் பேரழிவு: 162 பேர் உயிரிழப்பு; நூற்றுக்கணக்கானோர் மாயம் நேபாளத்தின் வடக்குப் பகுதியில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்