வவுனியா ஓமந்தை இராணுவ சாவடியில் வாகனத்தில் 8 கிலோ 75 கிராம் கேரளா கஞ்சாவினை கடத்திச்சென்ற குற்றச்சாட்டில் யுவதி உட்பட மூவர் இன்று (16) காலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஓமந்தை இராணுவ சாவடியில் சந்தேகத்திடமான முறையில் பயணித்த கார் ஒன்றினை மறித்து சோதனைக்குட்படுத்திய சமயத்தில் வாகனத்தின் பிற்பகுதியில் கேரளா கஞ்சாவினை கைப்பற்றினர். அதன் பின்னர் தொடர்ச்சியான சோதனையின் போது வாகனத்தின் ஆசனங்களின் கீழ்பகுதி போன்றவற்றிலிருந்து நான்கு கேரளா கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டன.
இதனையடுத்து வாகனத்தில் பயணித்த மாகாநுவர, மேல்சிறிபுர, கசலக பகுதியினை சேர்ந்த பெண் உட்பட மூவரை இரானுவத்தினர் கைது செய்ததுடன் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார், கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சா, சந்தேகநபர்கள் ஆகியோரை ஓமந்தை பொலிஸாரிடம் இராணுவத்தினர் ஒப்படைத்தனர்
கைது செய்யப்பட்ட நபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணைகளில் யாழ்ப்பாணத்திலிருந்து குருநாகல் நோக்கி கேரளா கஞ்சாவினை கடத்திச்சென்றுள்ளமை தெரியவந்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளின் பின்னர் சான்று பொருட்கள் மற்றும் சந்தேகநபர்களை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆயர்படுத்துவதற்குறிய நடவடிக்கைகளை ஓமந்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.