சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைக்கு இணங்கும் அரசுடன் இணைந்து பணியாற்ற மாட்டேன்: அமைச்சர் வாசுதேவ!

Date:

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு இணங்கும் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றப் போவதில்லை என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

அரசாங்கத்தில் நீடிப்பதா இல்லையா என்பதை எதிர்காலத்தில் தீர்மானிப்பதாக தெரிவித்த அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, தனது இராஜினாமா கடிதத்தை எழுதுவதற்கு ஒரு நிமிடமே ஆகும் எனவும் தெரிவித்தார்.

தான் இன்னும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சராக இருப்பதாகவும், தான் அமைச்சர் பதவியில் நீடிக்கும் வரை நீர் கட்டணத்தை அதிகரிக்க இடமளிக்கப் போவதில்லை எனவும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் 11 பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் நடத்திய விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இதனைத் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

நாளை நாடு தழுவிய வேலைநிறுத்தம்!

நாடளாவிய ரீதியில் நாளை (30.11.2026) முன்னெடுக்கப்படவுள்ள தொழிற்சங்கப் போராட்டங்களுக்கு மத்தியிலும், பொதுமக்களுக்கான...

முடிவுக்கு வரவுள்ள உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் : அமைச்சர் அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளை விரைவில் நிறைவு...

1983 கறுப்பு ஜூலை வன்முறைகள் தொடர்பில் விரிவான ஆய்வு – விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழு நியமனம்!

1983 ஜூலை மாதத்தில் இலங்கை முழுவதும் பரவிய கறுப்பு ஜூலை வன்முறைகள்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்